ஸ்டூடன்ட்ஸ் க்ரவுன் - குட்டி விஞ்ஞானி!
கோவை நேஷனல் மாடல் ஹையர் செகண்டரி பள்ளியில், 6ம் வகுப்பு டிக்கும் மாணவன் மனுசஞ்சய். பெற்றோர்: முகுந்தன் - பிரியா.வீட்டில் எப்போதும் துறுதுறுவென எலக்ட்ரிக் உபகரணங்களை வைத்துக்கொண்டு ஏதாவது எல்.இ.டி லைட்டுகளை எரியவிட்டு மகிழ்வது வழக்கம்.வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட தனக்கென ஒரு Personal fan தயார் செய்து அந்த சிறிய பேனையும், ஒரு எல்.இ.டி., லைட்டையும் தன் தொப்பியின் முகப்பிலேயே பொருத்தியபடி ஏரியாவை சுற்றி வலம் வருவான்.இந்த குட்டி விஞ்ஞானி எதிர்காலத்தில் மிகப்பெரிய விஞ்ஞானியாக வர சிறுவர்மலர் இதழ் சார்பில் வாழ்த்துகிறோம்.ஹாட்ஸ் ஆப் சஞ்சய்!