உள்ளூர் செய்திகள்

அப்துல்கலாமுக்கு நன்றி!

நான், எட்டாம் வகுப்பு படிக்கும் போது, நடந்த சுவையான நிகழ்ச்சி! என் ஆசிரியை வசுமதி, என்னை, 'மாவட்ட பேச்சு போட்டியில், நீ கலந்து கொள்ள வேண்டும்' என்றார். நானும், 'சரி' என்றேன்.ஆனால், எனக்கோ மிகவும் பயமாக இருந்தது. இருந்தாலும் அதில் வெற்றி பெற்று, என் பள்ளியையும், பெற்றோரையும் பெருமிதப்படுத்த வேண்டும் என்று பங்கேற்றேன். அங்கு என்னை போல், 92 பள்ளி மாணவியர் பங்கேற்றனர்.நான், 42வது மாணவியாக, மிகவும் பயந்து பயந்து பேசினேன். நடுவர் என்னை அழைத்து, 'நீ நன்றாக பேசினாய்' என்றார்.மறுநாள், என் பள்ளி வழிபாட்டில் தலைமை ஆசிரியர் மீனா, 'மதுரை மாவட்டத்தில் நடந்த பேச்சு போட்டியில், முதல் பரிசு வென்றுள்ளாய்' என கூறி, விருது, கேடயம் மற்றும் சான்றிதழை, வழங்கி என்னை கவுரவித்தார். சந்தோஷத்தில், மேடையிலேயே அழுதுவிட்டேன். என் பெற்றோரிடமும் நான் வெற்றி பெற்றதை கூறினேன். என் தந்தை கண்ணிலிருந்து ஆனந்த கண்ணீர் வந்தது.நம்மால் முடியாதது என்று எதுவும் இல்லை. இதனால் என் பள்ளிக்கும் என் பெற்றோருக்கும் பெருமிதம் காட்டியுள்ளேன் என்பதை நினைத்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இந்நேரத்தில், டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாமுக்கு நன்றி தெரிவிக்கிறேன். ஏனென்றால், அவரை பற்றி தான் பேச்சு போட்டியில் பேசி பரிசு வாங்கினேன்.- பா.பார்கவி, மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !