உள்ளூர் செய்திகள்

இரண்டு துவாரம்!

உலகப் புகழ்பெற்ற மாமேதை ஐன்ஸ்டீன் குழந்தை பருவத்தில் சராசரி மதிப்பெண்கள் வாங்கும் சாதாரண மாணவர்களில் ஒருவராகவே இருந்தார். ஆனால், பின்னாளில், தம்முடன் முதல்தர மதிப்பெண்கள் வாங்கியவர்களை எல்லாம் ஒன்றும் இல்லாமல் ஆக்கி விட்டார்.அவர் தன்னுடைய இளம் வயதில், பூனைக்குட்டி ஒன்றை மிகவும் ஆசையுடன் வளர்த்து வந்தார். அது, ஊரெல்லாம் சுற்றிவிட்டு, இரவு நேரத்தில், வெகு நேரம் கழித்து வந்து அவர் அருகில் படுத்துக் கொள்ளும்.அவருடைய வீட்டுக்குள், கட்டுக்காவல் நிறைய இருந்ததால், பூனை, இஷ்டப்படி திரிந்துவிட்டு, படுக்கையில் வந்து படுத்துக்கொள்ள முடியவில்லை. இதனால், அவர் கவலை அடைந்தார்.தன் அறைக்குள் பூனை வசதியாக நுழைய, அது நுழையக் கூடிய அளவு ஒரு சிறிய துவாரத்தை ஏற்படுத்தி விட்டார். இந்த ஏற்பாட்டால் பூனை மகிழ்ந்து போயிற்று.சில காலம் ஆனவுடன், பூனை, ஒரு குட்டிக்குத் தாயானது. ஐன்ஸ்டீன் சிந்திக்கத் துவங்கினார். இதுவரை, ஒரே ஒரு பூனையாகத் தம் வீட்டில் சுற்றி வந்த பூனை, தன் இனத்தைப் பெருக்கிக் குட்டி ஒன்றை ஈற்றெடுத்து விட்டது. எனவே, இதற்கு நாம், கூடுதல் வசதி எதையாவது செய்து தர வேண்டும். இந்தத் துவாரத்தின் வழியே பூனை சஞ்சாரம் செய்து, நம்மை எல்லாம் உற்சாகத்தில் தள்ளியது.இதோ, இந்தச் சின்ன ஜீவனுக்கும், ஏதாவது செய்தாக வேண்டும். அவர் கைகள் பரபரத்தன. உடனே அவர், உளியை எடுத்தார். பெரிய பூனை போய் வரும் துவாரத்துக்கு அருகே, சிறிய துவாரம் ஒன்றைச் செய்தார்.இதைக் கண்ட அவர் தாய் வியந்து போனார்.''இது என்ன புதிதாகத் துவாரம்?''''அதுவா... சின்ன பூனை பிறகு எந்த வழியில் போகுமாம்?'' ஐன்ஸ்டீன் கேட்டார்.''அட அசடே... அந்தப் பெரிய துவாரத்தின் வழியாகவே இந்தப் பூனைக் குட்டிகள் இரண்டும் எளிதாகப் போய் வரலாமே! இந்தச் சின்ன விஷயம் கூடவா உனக்குத் தெரியவில்லை?''அப்போது தான் ஐன்ஸ்டீனின் கண்கள் திறந்தன. 'அட, இது எப்படி எனக்குத் தெரியாமல் போயிற்று?'தன் நிலையை எண்ணி வெட்கினார்.குட்டீஸ்... உங்களில் சிலர் இப்போது அதிக மதிப்பெண்கள் எடுக்கவில்லை என்றோ, தான் ஒரு முட்டாள் என்றோ எண்ணி கவலைப்படாதீங்க. இன்று இப்படி இருக்கும் நீங்கள் நாளைக்கே ஒரு ஐன்ஸ்டீன் ஆக உருவாகலாம். யார் கண்டது?***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !