உள்ளூர் செய்திகள்

உடைக்க முடியாத சுள்ளிக்கட்டு! (மினிஸ்டோரி)

ஒரு செல்வந்தருக்கு நான்கு பிள்ளைகள் இருந்தனர். நால்வருக்கும் எப்போதும் சண்டைதான். செல்வந்தர் எத்தனையோ புத்தி சொல்லியும் எல்லாம் வியர்த்தமாயின.ஒருநாள் நால்வரையும் அழைத்தார் தந்தை. ஒரு சிறு சுள்ளிக்கட்டையை காண்பித்தார்.''இதை உடைப்பவருக்கு உயர்ந்த பரிசு தருகிறேன்!'' என்றார். ஒவ்வொருவனாய் முயற்சித்தனர். முடியவில்லை.கட்டை அவிழ்க்கச் சொன்னார். ''இப்போது உடைக்கமுடிகிறதா என்று பாருங்கள்!'' என்றார்.பையன்கள் ஆளுக்கொன்றாக எடுத்து முறித்துப் போட்டனர்.'பிள்ளைகளா! பார்த்தீர்களா... கூட்டாக இருந்த சுள்ளிக்கட்டை எவராலும் உடைக்க முடியவில்லை. ஆனால், தனித்தனியாகப் பிரிந்த சுள்ளிகள் துண்டாகிக்கிடக்கின்றன. நீங்கள் ஒற்றுமையாக இருந்தால் உங்களை எவராலும் வெல்லமுடியாது. அதுவே தனித்தனியே பிரிந்தால் முறிக்கப்படுவீர்கள்!'' என்றார்.அதுமுதல் சகோதரர்கள் ஒற்றுமையாக வாழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !