எச்சரிக்கை!
பட்டாசு வாங்கும் போதே, தீப்புண்ணுக்கு களிம்பும், வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு கடைசி நாளன்று ரெடிமேட் ஆடைகள் வாங்கி வந்து அளவு சரியில்லை என்றால் மாற்றவும் நேரமிருக்காது, பண்டிகையும், வீணாகிவிடும். சில நாட்களுக்கு முன்பே ஆயத்த ஆடைகளை வாங்கி அணிந்து பார்ப்பது நல்லது.பட்டாசு விடும்போது தீக்காயம் பட்டால், கொழுந்து வேப்பிலையுடன் மஞ்சள் வைத்து அரைத்துப் பூசவும். உடனடியாக எரிச்சல் அடங்கும். கொப்புளம் ஏற்படாது.பட்டாசு வெடிக்கும் சமயம் ஒரு பக்கெட்டில் மண் வைத்து, அதில் ஊது பத்தியைச் செருகி வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், அதில் கொளுத்திய மத்தாப்பு கம்பி, குச்சிகளைப் போட பாதுகாப்பாக வெடிக்கலாம்.