உள்ளூர் செய்திகள்

கும்பிடுறோம் நர்ஸ்சம்மா!

அரசு மேல் நிலைப்பள்ளியில், 12ம் வகுப்பு படித்து முடித்தேன்.ஒருநாள் இரு சக்கர வாகனத்தில் கடைக்கு சென்றேன். அப்போது திடீரென, வண்டியில் இருந்து கீழே விழுந்து, காயம் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனைக்கு எடுத்து சென்ற போது, அங்கிருந்தவர்கள், 'அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லுங்கள்' என்று கூறி விட்டனர்.உடனே, அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்குள்ள, நர்சுகள் கண்டு கொள்ளவே இல்லை. வெகு நேரத்திற்கு பின், மருத்துவரை பார்த்து, காயமடைந்த எனக்கு சிகிச்சை அளித்தனர்.அன்று என் மனதில், 'படித்து, நர்சாகி நோயாளிகளை நன்கு கவனிக்க வேண்டும்' என்ற வெறி எனக்குள் எழுந்தது. நினைத்தது போலவே படித்து, இன்று நர்ஸ்சாக பணிபுரிகிறேன். எல்லா நோயாளிகளுக்கும் நன்றாக சேவை செய்கிறேன்!- ஏ.ரேவதி மணிமாறன்.சூப்பர் சகோதரி!- பொறுப்பாசிரியர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !