உள்ளூர் செய்திகள்

வீ டூ லவ் சிறுவர்மலர்!

நான், 31 ஆண்டுகளாக பள்ளியில் ஆசிரியையாக இருக்கிறேன். எனக்கு பள்ளி மற்றும் குடும்பம் இரண்டையும் நெறிப்படுத்தும் உற்ற தோழனாக இருப்பது நம் சிறுவர்மலர் இதழ் தான். 55 வயதை தொட்டு விட்டாலும், இன்றும் வெள்ளிகிழமை வந்துவிட்டால், என் மகள்களுடன் சிறுவர்மலர் இதழை படிப்பதில் போட்டி போடுகிறேன்.பள்ளி சென்றதும், என் வகுப்பு மாணவர்கள், என்னிடம் முதலில் எதிர்பார்ப்பது சிறுவர்மலர் இதழை தான். நானும், வகுப்பில் நேரம் கிடைக்கும்போது, இதழில் வரும் கருத்துள்ள கதைகளை கூறுவேன்.நான் இதுவரை என் உடலில் ஏழு அறுவை சிகிச்சைகள் செய்துள்ளேன். உடல் மற்றும் மன அளவில் சோர்வு ஏற்படும்போது, சிறுவர்மலர் இதழில் வரும் தன்னம்பிக்கை தரும் கதைகளும், கருத்துக்களும் என்னை உற்சாகப்படுத்தி, வலுவூட்டுகின்றன.என்றும், என்னுடைய சாய்ஸ் சிறுவர்மலர் இதழ் தான்.-பி.சுப்புலட்சுமி செல்வராஜ், தேவகோட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !