வீ டூ லவ் சிறுவர்மலர்!
என் வயது, 58; நான், 7ம் வகுப்பு வரை படித்துள்ளேன். அக்கம் பக்கத்து தோட்டங்களில், கூலி வேலை செய்து வாழ்கிறேன். சிறுவர்மலர் இதழின் நீண்ட நாள் வாசகி. படித்த பல கதை, கட்டுரைகள் மனப்படாமாக உள்ளன.அவற்றை, உடன் வேலை செய்வோருக்கு, சொல்வேன். சலிப்பை போக்குவதாக மகிழ்ந்து தினமும் கதை கேட்பர். இதனால், அவ்வப்போது மனப்பாடம் செய்து, பணியின் போது சுவாரசியமாக கூறுவேன்.இதனால், வெயிலில் வேலை செய்யும் போது ஏற்படும் களைப்பும், சோர்வும் பறந்து விடுகிறது; நேரம் போவதே தெரிவதில்லை. அத்துடன், மதிய உணவு இடைவேளையில், மற்றவர்களுக்கு சிறுவர்மலர் இதழை எழுத்துக் கூட்டி படிக்க, கற்று தருகிறேன்.பொது அறிவு களஞ்சியமாக திகழும், சிறுவர்மலர் இதழை, எங்கள் வீட்டு அறிவு பொக்கிஷம் என்பேன்.- சி.லிங்கம்மாள், கோவை.