வீ டூ லவ் சிறுவர்மலர்!
என் வயது, 33; சிறுவர்மலர் இதழை, மூன்று ஆண்டுகளாக படித்து வருகிறேன். என் மகனுக்கு, மூன்று வயதாகிறது; அவனுக்கு, நாள், கிழமை பற்றி எல்லாம் எதுவும் தெரியாது. ஆனால், 'வெள்ளிக்கிழமை...' என்று கூறினால் போதும், 'சிறுவர்மலர் புத்தகம் எங்கே...' என்று கேட்பான்.'உங்கள் பக்கம்' பகுதியை பார்த்து, அதில் வரும் படங்கள் போல் வரைய முயற்சி செய்வான். இந்த பழக்கம், ஓவியம் வரைவதில், அவனுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டது.இரவில், துாங்க போகும் முன், கதை கூற சொல்வான்; சிறுவர்மலர் இதழில் வரும் சிறுகதைகளை படித்து கூறுவேன். அதை கேட்ட பின் தான் துாங்குவான். சிறுவர்மலர் புத்தகம், வீட்டில், ஒரு பெரியவர் இருப்பது போல் மனசுக்கு தெம்பூட்டுகிறது. பின் அட்டையில், 'குட்டி குட்டி மலர்கள்' பகுதி படங்களைப் பார்த்து, 'அண்ணன், அக்கா...' என்று கூறி மகிழ்கிறான். இதை கேட்பதால் ஏற்படும் மகிழ்ச்சிக்கு, ஈடு இணை எதுவும் இல்லை.குழந்தைகளை குதுாகலப்படுத்தும் சிறுவர்மலர் இதழே... உனக்கு மனமார்ந்த நன்றியை சமர்ப்பிக்கிறேன்!- கு.கணேஷ், கடலுார்.