உள்ளூர் செய்திகள்

வீ டூ லவ் சிறுவர்மலர்!

என் வயது, 69; பள்ளி தலைமை ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றேன். சிறுவர்மலர் இதழை மிகுந்த ஆர்வத்துடன், சிறு பிள்ளைகள் போல படித்து வருகிறேன். சிறுகதைகளில் துவங்கி, மொக்க ஜோக்ஸ், இளஸ்... மனஸ்... ஸ்கூல் கேம்பஸ், அங்குராசு என, அனைத்து பகுதிகளையும் விடாமல் படிக்கிறேன்.சிறுகதைகளின் முடிவில், 'குட்டீஸ்...' என, விளித்து கூறும் அறிவுரை மிகச் சிறப்பு. பள்ளியில் பாடம் நடத்திய நாட்களில், வகுப்பின் இறுதியில், ஒரு கதை சொல்வதை வழக்கமாக கொண்டிருந்தேன். அதற்கு, சிறுவர்மலர் இதழ் கதைகளைத் தான் தேர்வு செய்தேன். அவற்றை தொகுத்து புத்தகமாக வைத்துள்ளேன். அமெரிக்காவில் வசிக்கும் என் மகள் வயிற்று பேரன், துாங்கப் போகும் முன், 'கதை சொல்லுங்க பாட்டி...' என்று ஆர்வமுடன் கேட்பான். தொகுத்துள்ளவற்றில் இருந்து எடுத்துச் சொல்லி, 'கதையிலிருந்து என்ன தெரிந்து கொண்டாய்...' என, கேட்பேன். மிகச்சரியாக, அதில் குறிப்பிடும் நீதியை சொல்லி பிரமிக்க வைப்பான். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். ஆயுள் உள்ளவரை, சிறுவர்மலர் படிப்பேன்.- ரா.சரோஜா, விழுப்புரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !