உள்ளூர் செய்திகள்

வீ டூ லவ் சிறுவர்மலர்!

என் குழந்தை பருவம் மிக இனிமையானது. சிறுவர்மலர் புத்தகத்தில் படித்த கதைகளை, கதாபாத்திரங்களாக மாறி கூறுவார் அப்பா. அதை கேட்டு மகிழ்ந்தேன். இப்படி ஏற்பட்ட ஆர்வத்தால், 6 வயதில், சிறுவர்மலர் இதழை படிக்கத் துவங்கி, அடிமையாகி விட்டேன். அனைத்து பகுதிகளும், தேன் போல தித்திக்கின்றன. குழந்தைகள் வரையும் ஓவியங்கள், உயிர் பெற்று, வாசகர்களை உயிர்ப்பிக்கிறது. வாரம், இருமுறை இதழை வெளியிட்டால், மகிழ்ச்சி அடைவேன்.அன்றாடம் அலைபேசி இல்லாமல் கூட இருந்து விடுவேன்; ஆனால், சிறுவர்மலர் இன்றி கண்டிப்பாக இருக்க முடியாது. வாழ்வில் ஏற்படும் வலியை, 'மொக்க ஜோக்ஸ்!' பகுதியில் வரும் தமாசுகள் மறக்க வைக்கின்றன. சிறுகதைகள் வியப்பை தருகின்றன. ஆறு முதல், 60 வயது நிரம்பிய முதியவரையும் படிக்க துாண்டுகிறது. சிறுவர்மலர், என்றும் சிறப்பாக மலர வாழ்த்துகிறேன்!- செ.பா.முத்துமாலை, மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !