உள்ளூர் செய்திகள்

வீ டூ லவ் சிறுவர்மலர்!

என் வயது, 75; அரசு பள்ளியில் தலைமையாசிராக பணியாற்றி நல்லாசிரியர் விருதுடன் ஓய்வு பெற்றேன். வாழ்வில், பல ஆண்டுகளாக சிறுவர்மலர் இதழை படித்து, அதில் கூறும், நீதி நெறிமுறைகளை பின்பற்றி வருகிறேன். என் மாணவர்கள், பேரப்பிள்ளைகளுக்கும் கூறி நெறிப்படுத்துகிறேன். சிறுவர்களுக்காக, எத்தனையோ இதழ்கள் வெளிவந்தாலும், சிறுவர்மலர் இதழுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. கண்ணைக் கவரும் வண்ணத்தில் படக்கதைகளும், அறிஞர் பொன்மொழிகளும், அறிவியல் கட்டுரைகளும் முதியோரையும் ஈர்க்கின்றன. அங்குராசு பகுதியில் வரும் தகவல்கள் அபாரம்.சிறுவர், சிறுமியரின் தனித்திறனை வெளிப்படுத்தும், 'உங்கள் பக்கம்!' பகுதி பாராட்டுதற்குரியது. ஊக்கத் தொகை அளித்து, வாசகர்களை உற்சாகப்படுத்தும் ஒரே இதழ் சிறுவர்மலர் மட்டும் தான். இதை கூறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். கலைக்களஞ்சியமாக திகழும் சிறுவர்மலர் இதழின் பணி தொடர வாழ்த்துகிறேன்!- ரா.சேது, மதுரை.தொடர்புக்கு: 97881 67789


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !