வீ டூ லவ் சிறுவர்மலர்!
என் வயது, 60; சிறுவர்மலர் இதழ் படிப்பதை, பிறரோடு பல ஆண்டுகளாக பகிர்ந்து வருகிறேன். யாரிடமாவது, 'இதை படித்து பாருங்க...' என்று, 'மொக்க ஜோக்ஸ்' பகுதியை கொடுக்கும் போதே சிரித்து விடுவேன். என் பேரன்களுக்கு, 'மம்மீஸ் ஹெல்த்தி கிச்சன்!' பகுதியில் வரும் குறிப்புகள் பயனுள்ளதாக உள்ளன. புதிது புதிதாக உணவு செய்து கொடுக்க முடிகிறது. பணி நேரத்தில், யாராவது பேச்சு கொடுத்தால், சிறுவர்மலர் இதழில் படித்த, 'இளஸ் மனஸ்!' பகுதி அறிவுரையை பகிர்வேன். சிறுவர்களின் கற்பனை உலகம், 'உங்கள் பக்கம்' பகுதி. பெரியவர்களான, சிறுவர்களின் அனுபவம், 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதி. இவை நல்ல பாடமாக உள்ளன. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைக்காக காத்திருப்பது என் வழக்கமாகி விட்டது... சிறுவர்மலர் இதழ் வளமாக வளர வாழ்த்துகிறேன்!- வி.பொன்ராஜ், திண்டுக்கல்.