வீ டூ லவ் சிறுவர்மலர்!
என் வயது, 41; வாரந்தோறும் சிறுவர்மலர் இதழை ஒரு வரி விடாமல் படித்து விடுவேன்; படிக்கும் போது, சிறுவனாகவே மாறி விடுகிறேன். சிறுகதை மற்றும் தொடர்களை பற்றி நண்பர்களுடன் விவாதிப்பேன். மலரும் நினைவுகளுக்கு, 'ஸ்கூல் கேம்பஸ்' பகுதி, அரிய தகவல்களுக்கு அங்குராசு, ஓவியத்திறனுக்கு, 'உங்கள் பக்கம்' மற்றும் வினோதமான சந்தேகங்களுக்கு, 'இளஸ்... மனஸ்...' என, சிறுவர்மலர் இதழுக்கு நிகராக எதுவும் இல்லை.சமீபத்தில், 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதியில், 'வாசிப்பின் பயன்!' என நான் எழுதிய கட்டுரையை படித்து, தொலைபேசியில் திக்கு முக்காட வைத்தனர் வாசகர்கள்; அந்த அன்பில் திளைத்தேன். அந்த கட்டுரையை படித்த என் ஆசிரியர் திருஞானம், 25 ஆண்டுகளுக்கு முந்தைய நாட்களை நினைவுகூர்ந்தார். குழந்தை போல மலரும் நினைவை பரிமாறிக் கொண்டோம். வாழ்வில் மறக்க முடியாத அரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த, சிறுவர்மலர் இதழுக்கு மனங்கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.- டி.பாண்டி, மதுரை.தொடர்புக்கு: 97914 20793