வீ டூ லவ் சிறுவர்மலர்!
என் வயது, 79; குடும்ப தலைவியாக உள்ளேன். தினமலர் சென்னை பதிப்பில் வெளியாகும் சிறுவர்மலர் இதழை, வாரந்தோறும் என் சகோதரன் அஞ்சலில் அனுப்பி வைக்கிறான். அது, கையில் கிடைத்தவுடன் படித்து முடித்து விட்டு தான், மறுவேலை பார்ப்பேன். அதில் வரும் சிறுகதைகள், இளம் சிறார்களுக்கு நல்வழியை போதிக்கிறது. சிறுவர் நலனில் அக்கறை செலுத்துவதை காண்கிறேன். இதழில் சத்துள்ள ரெசிபிக்களும் சூப்பர்!பள்ளி அனுபவங்களை, 'ஸ்கூல் கேம்பஸ்' பகுதியில் படிக்கும் போது, அந்தந்த ஆசிரியர்களின் பொறுப்புணர்வும், அக்கறையும் புல்லரிக்க வைக்கிறது.இளம் ஆசிரியர்களுக்கும் அந்த பகுதி பெரும் படிப்பினை தரும். அருமையான இந்த அறிவுப் பெட்டகத்தை சிறுவர் சிறுமியருக்கு படித்து கூறுவதுடன், பாதுகாத்தும் வருகிறேன். இந்த பணி தொடரட்டும்!- ஜி.நீலா, கும்பகோணம்.தொடர்புக்கு: 80729 83474