உள்ளூர் செய்திகள்

வீ டூ லவ் சிறுவர்மலர்!

என் வயது, 72; தனியார் பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். அரசு பள்ளியில் சத்துணவு பொறுப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றார், என் மனைவி ப.ரத்தினம். இருவரும், 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறுவர்மலர் இதழை தீவிரமாக வாசித்து வருகிறோம்.மாணவப் பருவத்திற்கே அழைத்துச் செல்கிறது, 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதி. அறிவூட்டும் கட்டுரை, சிறுகதை, படக்கதை மற்றும், 'அதிமேதாவி அங்குராசு!' தரும் அற்புத விஞ்ஞான தகவல்கள் ஆர்வத்துடன் படிக்க துாண்டுகின்றன. வாழ்க்கையை சீர்படுத்த வழிகாட்டுகிறது பிளாரன்ஸ் தரும் எதார்த்தமான அறிவுரை. சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கின்றன, மொக்க ஜோக்குகள். அறிவு கூர்மையை சோதிக்கும் பரிசுப் போட்டி, எழில்மிகு குழந்தை படங்களுடன், 'குட்டி குட்டி மலர்கள்' என அலங்கரித்து வண்ணங்களால் ஜொலிக்கிறது, சிறுவர்மலர்.வயது வித்தியாசமின்றி மக்களை கவர்ந்திழுக்கும் காந்த சக்திமிக்க மனோரஞ்சித மலர் இது. தொடரட்டும் சிறுவர்மலர் இதழின் தொண்டுகள்.- வி.வரதராஜன், திண்டுக்கல்.தொடர்புக்கு: 90944 37923


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !