வீ டூ லவ் சிறுவர்மலர்!
என் வயது, 58; மகள்கள் சோனி, சைனி. தனியார் பள்ளியில், ஆசிரியையாக வேலை செய்கின்றனர். பள்ளி வகுப்பு முடிந்து மாலை வீடு திரும்பியதும், 5ம் வகுப்பு வரை தமிழ், ஆங்கில பாடங்களில் சிறப்பு வகுப்பு நடத்துவர். இதற்காக, பல குடும்பங்களில் இருந்து சிறுவர், சிறுமியர் எங்கள் வீட்டுக்கு வருவர். அப்படி வருவோருக்கு, சிறுவர்மலர் இதழை படித்து காட்டுவேன். பரவசமடைவர். உற்சாகமூட்டும் கட்டுரைகள் மற்றும் 'ஸ்கூல் கேம்பஸ்' பகுதியை விரும்பி ரசிப்பர். மொக்க ஜோக்ஸ், சிறுகதைகளை கேட்டு பரவசமடைவர்.ஒரு சனிக்கிழமை மாலை, சிறுவர்மலர் இதழை படித்து காட்டிய போது, மாணவன் ஒருவன் எழுந்து, 'எங்க வீட்டிலும் இந்த புத்தகம் வாங்குகிறோம்...' என, சிறுவர்மலர் இதழை காட்டினான்.குழந்தைகளின் மனம் கவர்ந்த சிறுவர்மலர் இதழ் மேலும் சிறகடித்து உயரத்தில் பறக்க வாழ்த்துகிறேன்.- மா.ராணி, கோவை.தொடர்புக்கு: 96971 65165