வீ டூ லவ் சிறுவர்மலர்!
என் வயது, 73; இல்லத்தரசியாக இருக்கிறேன். தினமலர் நாளிதழை நீண்ட காலமாக வாசித்து வருகிறேன். சிறு குழந்தை போல சிறுவர்மலர் இதழையும் வாசிக்க தவறுவதில்லை.அறிவை புகட்டும், 'அதிமேதாவி அங்குராசு!' பகுதியில், இடம் பெறும் கட்டுரைகள், 'மொக்க ஜோக்ஸ்!' பகுதி தமாசுகள், சிறுகதை, தொடர்கதை மற்றும் 'இளஸ்... மனஸ்...' பகுதி என விடாமல் அனைத்தையும் வாசித்து விடுவேன்.அறிந்து கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்கள், தொடர்ந்து வருவதால், என் பேரப் பிள்ளைகள் இருவரையும் தவறாது படிக்க, பழக்கப் படுத்தி விட்டேன். அவர்களுக்கு வாசிப்பு ஆர்வத்தை, சிறுவர்மலர் துாண்டி வருகிறது என்பதை, மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்.- ஏ.அபிதாம்பிகை, மதுரை.தொடர்புக்கு: 84389 47405