வீ டூ லவ் சிறுவர்மலர்!
என் வயது, 62; புதுச்சேரி நகராட்சியில் அலுவலக மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். நீண்ட நாட்களாக சிறுவர்மலர் இதழை படிக்கிறேன். பள்ளிப் பருவ நிகழ்வுகளை நினைத்துப் பார்க்க வைக்கிறது, 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதி. அடுத்தது என்ன என்ற ஆவலைத் துாண்டுகிறது, தொடர் கதை!படைப்பாளிகளை ஊக்கப்படுத்துகிறது, வாசகர் பகுதி! மழலையரை மகிழ்விக்கிறது படக்கதை! அரிய தகவல்களை அள்ளி தருகிறது, 'அதிமேதாவி அங்குராசு' பகுதி. குதுாகலிக்க வைக்கிறது, 'மொக்க ஜோக்ஸ்' பகுதி. இளசுகளின் மனதை நெறிப் டுத்துகிறது, 'இளஸ்... மனஸ்...' பகுதி.மாணவ, மாணவியர் எண்ணங்களை வண்ணமயமாக்குகிறது, 'உங்கள் பக்கம்' பகுதி. நாக்கில் எச்சில் ஊற வைக்கிறது, 'மம்மீஸ் ஹெல்த்தி கிச்சன்!' பகுதியில் வரும் உணவு. ஒவ்வொரு வாரமும், சிறுவர்மலர் மேலும் சிறப்புடன் வெளிவர உளமார்ந்த வாழ்த்துகள்!- ஆ.தேவதாஸ், புதுச்சேரி.தொடர்புக்கு: 74486 47587