ராகி, நாவல் பழம் குழி பணியாரம்!
தேவையான பொருட்கள்:ராகி மாவு -- 1 கப்நாட்டு சர்க்கரை -- 3 தேக்கரண்டிநாவல் பழம் -- 10பால் -- 1 கப்ஏலக்காய் பொடி, நெய் - தேவையான அளவு.செய்முறை:நாவல்பழத்தில் விதை நீக்கி, ஏலக்காய் பொடி கலந்து அரைக்கவும். அதில், ராகி மாவு, பால், நாட்டு சர்க்கரையை கலக்கவும். பணியாரக்கல் சூடானதும், நெய் தடவி, கலந்த மாவை ஊற்றி வேக வைக்கவும். சுவைமிக்க, 'ராகி, நாவல் பழம் குழி பணியாரம்!' தயார். அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.- நாகஜோதி கிருஷ்ணன், சென்னை.