உள்ளூர் செய்திகள்

வீ டூ லவ் சிறுவர்மலர்!

என் வயது, 68; புத்தக பைன்டிங் தொழில் செய்து வருகிறேன். சிறுவர்மலர் இதழை வெகு ஆர்வமுடன் படிக்கிறேன். பாமரர் முதல், பணக்காரர் வரை விரும்பும் வகையில் திகழ்கிறது, தினமலர் நாளிதழ். இணைப்பாக வரும் சிறுவர்மலர் இதழும் அனைவர் கவனத்தையும் கவர்ந்துள்ளது. சிறுவர்மலர் இதழை முழுவதுமாக படித்து கருத்துகளை, சிறுவர்களிடம் எடுத்துச் சொல்லி வருகிறேன். பிஞ்சு குழந்தைகள் படம் இடம் பெறும், 'குட்டி குட்டி மலர்கள்!' மிகவும் அருமை. மாணவர்களின் திறன் வளர்க்கும் விதமாக, 'உங்கள் பக்கம்!' ஓவியங்கள் மிளிர்கின்றன. இதழில் வெளியாகும், 'சிறுகதைகள்!' நீதிநெறியை அழகாக கற்றுத் தருகின்றன. ஒவ்வொரு பகுதியும், மனதுக்கு தெம்பு ஊட்டி, நம்பிக்கை அளிப்பதை உணர்கிறேன். சிறுவர்மலர் இதழ் சீரும் சிறப்புடன் வளர வாழ்த்துகிறேன்! - து.சந்திரமோகன், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !