வீ டூ லவ் சிறுவர்மலர்!
என் வயது, 76; மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் துணை நுாலகராக பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். சிறுவர்மலர் இதழை நீண்ட காலமாக படிக்கிறேன். குடும்பத்தில் அனைவரும் விரும்பி படிக்கின்றனர். பள்ளி பருவ நிகழ்வுகளை, 'ஸ்கூல் கேம்பஸ்!' கடிதங்கள் நினைவுப்படுத்துகின்றன. அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவலை துாண்டுகிறது தொடர்கதை. படிப்பாளிகளை ஊக்குவிக்கிறது வாசகர் பகுதி.சிறுவர், சிறுமியரை மகிழ்விக்கிறது படக்கதை. அதிமேதாவி அங்குராசு புதிய செய்திகளை தெரிவிக்கிறது. மனம் மகிழ வைக்கிறது, 'மொக்க ஜோக்ஸ்!' பகுதி. இளைய தலைமுறை எண்ணங்களை, 'இளஸ்... மனஸ்...' செம்மைப்படுத்துகிறது. மாணவ, மாணவியர் கற்பனை திறனை 'உங்கள் பக்கம்!' வெளிப்படுத்துகிறது.வித்தியாசங்களை தந்து சுவைக்க துாண்டுகிறது, 'மம்மீஸ் ெஹல்த் கிச்சன்!' உணவு அறிமுகப் பகுதி. ஒவ்வொரு வாரமும் பல்சுவையுடன் மிளிரும் சிறுவர்மலர் இதழ் மேலும் சிறக்க இதயபூர்வமாக வாழ்த்துகிறேன்!- ஜி.தனசேகரன், மதுரை.தொடர்புக்கு: 99442 57364