உள்ளூர் செய்திகள்

வீ டூ லவ் சிறுவர்மலர்!

என் வயது, 45; ஸ்டேசனரி பொருட்கள் விற்கும் கடை நடத்தி வருகிறேன். சிறுவர்மலர் இதழின் தீவிர ரசிகன். சனிக்கிழமை அதிகாலைக்காக காத்திருந்து தவறாமல் படித்து வருகிறேன். சிறுவர், சிறுமியர் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் படிக்க உகந்ததாக உள்ளது.மாணவ, மாணவியரை உற்சாகம் கொள்ள வைக்கும் விதமாக, 'உங்கள் பக்கம்' மிளிர்கிறது. படைப்பு கற்பனையை உலகளாவிய ரீதியில் கொண்டு செல்ல உதவுகிறது. சிறுவர்மலர் இதழ் சமூகப் பணிக்களமாக அமைந்திருப்பதே உண்மை. பலவித அனுபவங்களை அள்ளித்தரும், 'ஸ்கூல் கேம்பஸ்!' ஒரு தலைமுறையின் உயிர்த்துடிப்பு; பள்ளிக்கால நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் களமாக உள்ளது. அறிவுக்கு உகந்தவற்றை, 'அதிமேதாவி அங்குராசு' பகுதியில் அறிய முடிகிறது. பலவித தகவல்களை தெரிந்து கொள்ள உதவும் சிறுவர்மலர் மென்மேலும் உயர வாழ்த்துகள்.- சி.கார்த்திகேயன், விருதுநகர்.தொடர்புக்கு: 94426 66205


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !