வீ டூ லவ் சிறுவர்மலர்!
என் வயது, 75; சென்னை அரசு மருத்துவமனையில் செவிலியர் கண்காணிப்பாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். தினமலர் நாளிதழின் நீண்ட கால வாசகி. சிறுவர்மலர் இதழை தவறாமல் படித்து வருகிறேன். இதில், 'உங்கள் பக்கம்' பகுதியை பார்த்து என் பேத்தியும் ஓவியம் வரைகிறாள். புள்ளிகளை இணைத்து வரையும் படத்தை முழுமையாக்குவேன். வயிறு குலுங்க வைக்கும், 'மொக்க ஜோக்ஸ்' தமாசுகளை வாசித்து பேத்தியை மகிழ்ச்சியடைய செய்கிறேன். பல வயதுடையோரும் ஆர்வமுடன் கேட்கும், 'இளஸ் மனஸ்' கேள்விகளுக்கான பதில் பல விஷயங்களை கற்றுத் தருகிறது. தொடர்கதை, சிறுகதைகளை ஆர்வமாக படிக்கிறேன். மிகவும் உதவியாக இருக்கிறது, 'மம்மீஸ் ெஹல்த் கிச்சன்' உணவு செய்முறை. குட்டி குட்டி மலர்கள் படங்கள் மிகவும் அருமை. எல்லா வயதினருக்கும் உகந்த சிறுவர்மலர் இதழுக்கு என் பாராட்டுகள்!- ஏ.கஸ்துாரி, சென்னை.தொடர்புக்கு: 99401 40917