உள்ளூர் செய்திகள்

வீ டூ லவ் சிறுவர்மலர்!

என் வயது 46; பள்ளி மாணவ, மாணவியருக்கு தனிப்பயிற்சி மையம் நடத்துகிறேன். சிறுவர்மலர் இதழை பல வருடங்களாக படித்து வருகிறேன். மாணவ, மாணவியருக்கு ஏற்படும் மனச்சோர்வை போக்க, 'இளஸ் மனஸ்' பதில்களை படித்துக்காட்டுவேன். அது தெளிவை ஏற்படுத்துகிறது.அறிவுபெட்டகமாக திகழ்ந்து சிறுவர், சிறுமியருக்கு நற்சிந்தனை, ஒழுக்கம் வளர்க்கும் இதழாக விளங்குகிறது சிறுவர்மலர். பள்ளிப்பருவ நினைவுகளை அசைபோடும், 'ஸ்கூல் கேம்பஸ்' கடிதங்கள் உயிர்ப்பூட்டுகின்றன. கவலையை மறந்து சிரிக்க, 'மொக்க ஜோக்ஸ்' தமாசுகள், நீதி நெறி வளர்க்கும் சிறுகதைகள் என, மேன்மை மிக்க சேவையை செய்கிறது சிறுவர்மலர் இதழ்.ஆரோக்கிய வாழ்வுக்கு, 'மம்மீஸ் ஹெல்த் கிச்சன்' சத்துள்ள உணவுகளை அறிமுகம் செய்கிறது. சிறுவர், சிறுமியர் ஓவியங்களை தாங்கியுள்ள, 'உங்கள் பக்கம்' பகுதி கற்பனை வளத்தை மேம்படுத்துகிறது. இப்படி அறிவு வளர்க்கும் பொக்கிஷமாக விளங்கும், சிறுவர்மலர் இதழுக்கு ஈடு, இணையாக எதுவுமில்லை.- டி.சுதாகர், ராமநாதபுரம். தொடர்புக்கு: 89251 72973


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !