வீ டூ லவ் சிறுவர்மலர்!
என் வயது, 45; சினிமாத் துறையில் பணிபுரிகிறேன். பள்ளி நுாலகத்தில், 1993ல் சிறுவர்மலர் இதழ் அறிமுகமானது. உணவு இடைவேளை விட்டவுடன் ஓடிப்போய் தேடுவோம். யார் முதலில் படிப்பது என நண்பர்களுக்குள் போட்டி ஏற்படும். சிறுவர்மலர் இதழில் வரும் நீதிக் கதை, படக்கதை, தொடர்கதை என எல்லாம், 'பாசிடீவ் எனர்ஜி'யை தருகின்றன. பள்ளி பருவத்தில் துவங்கி இன்று வரை தொடர்ந்து படித்து வருகிறேன். படிக்கும் போது இனம் புரியாத உணர்வு ஏற்பட்டு சிறுவனாக மாறிவிடுகிறேன். பெரியவர் முதல் சிறியவர் வரை விரும்பும் ஒரே இதழாக சிறுவர்மலர் உள்ளது. தமாசுகளை, 'மொக்க ஜோக்ஸ்!' அள்ளித்தருகிறது. பள்ளிக்கால நினைவுகள், 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதியில் உணர்வாய் மலர்கிறது. இதயத்தில் குடியேறியுள்ள சிறுவர்மலர் இதழ் மேலும் வளர வாழ்த்துகிறேன். -கோ.குப்புசுவாமி, கள்ளக்குறிச்சி. தொடர்புக்கு: 98401 46754