உள்ளூர் செய்திகள்

வீ டூ லவ் சிறுவர்மலர்!

என் வயது 60; இல்லத்தரசியாக இருக்கிறேன். சிறுவர்மலர் இதழை தவறாமல் படித்து வருகிறேன். அறிவு மேம்பாட்டிற்கு பெரும் உதவி புரிந்து வருகிறது. என் குழந்தைகளும், கணவரும் விரும்பி படிக்கின்றனர். இதில் இடம் பெறும், 'ஸ்கூல் கேம்பஸ்' கடிதங்கள் படிப்போருக்கு பள்ளி பருவ நினைவுகளை தருகிறது. புதிர் பகுதியில் சரியான விடை எழுதி பலமுறை பரிசு பெற்றுள்ளனர், என் பேரப்பிள்ளைகள். ஒவ்வொரு வாரமும் ஒரு புதுவித சமையல் குறிப்புகளை வழங்குகிறது, 'மம்மீஸ் ெஹல்தி கிச்சன்' பகுதி. விழுந்து விழுந்து சிரிக்க வைக்கின்றன, 'மொக்க ஜோக்ஸ்' தமாசுகள். ஒரு விஷயத்தை பற்றிய தகவல்களை முழுமையாக, 'இளஸ் மனஸ்' தருகிறது. சிறுகதையும், 'குட்டி குட்டி மலர்கள்' வனப்பும் குதுாகலிக்க வைக்கின்றன. சிறுவர்மலர் இருக்கும் வரை மகிழ்ச்சிக்கு பஞ்சமில்லை. என் மனமார்ந்த வாழ்த்துகள்! - எம்.ருக்குமணி, கள்ளக்குறிச்சி. தொடர்புக்கு: 94871 52382


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !