உள்ளூர் செய்திகள்

வீ டூ லவ் சிறுவர்மலர்!

என் வயது, 55; அரசு பணியாளராக உள்ளேன். சிறுவர்மலர் இதழை, 15 ஆண்டுகளாக படித்து வருகிறேன். அனைவருக்கும் பிடித்தமான செய்திகளை தாங்கி வருகிறது. சிறுவர் முதல் பெரியவர்கள் வரை, கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. இதில் வெளியாகும், 'ஸ்கூல் கேம்பஸ் ' கடிதங்கள், வாழ்க்கையில் நம்பிக்கை ஊட்டும் வகையில் உள்ளன. புதிர், மம்மீஸ் ஹெல்தி கிச்சன் மற்றும் மழலையர் பக்கம் பகுதிகள், சுவை ஊட்டுகின்றன. தமாசுகளின் குடோனாக திகழ்கிறது, 'மொக்க ஜோக்ஸ்' பகுதி. சிறப்பான சிறுகதை, அறிவான தொடர்கதை, சந்தேகங்களை போக்கும், 'இளஸ் மனஸ்' என, கவரும் வகையில் உள்ளன. குழந்தைகளின் புன்னகை முகங்களுடன், 'குட்டி குட்டி மலர்கள்' மிகவும் கவர்கிறது. மொத்தத்தில், சிறுவர்மலர் வாசிக்கவும், தேவையான விஷயங்களை தெரிந்து கொள்ளவும் பெட்டகமாக திகழ்கிறது. அது, மென்மேலும் மணம் வீச, மனமார்ந்த நல்வாழ்த்துகள்! - ச.கண்ணன், திண்டுக்கல். தொடர்புக்கு: 88071 46036


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !