உள்ளூர் செய்திகள்

வீ டூ லவ் சிறுவர்மலர்!

என் வயது, 71. தமிழக அரசில் பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். சிறு வயது முதல், சிறுவர்மலர் இதழை, குடும்பத்தினருடன் விரும்பி படித்து வருகிறேன். புத்தகத்தை கையில் எடுத்தால், படித்து முடிக்காமல் வைக்க முடிவதில்லை. கடைசி வரை படித்து ரசிப்பதால், நேரம் போவதே தெரிவதில்லை. சிந்திக்க வைக்கிறது, புதிர் போட்டி; மலரும் நினைவாக, பள்ளி வாழ்க்கை பற்றி கூறுகின்றன, 'ஸ்கூல் கேம்பஸ்' கடிதங்கள்; வாய் விட்டு சிரிக்க வைக்கின்றன, 'மொக்க ஜோக்ஸ்' தமாசுகள்; நற்பண்புகள், நீதியை போதிக்கிறது சிறுகதை மற்றும் படக்கதை; சாகசங்கள் நிறைந்த தொடர்கதை ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. சிறுவர், சிறுமியர் ஓவியத்திறனை வளர்க்கும், 'மழலையர் பக்கம்' வண்ணமயமாக திகழ்கிறது. ஆரோக்கியம் காக்கும், 'மம்மீஸ் ஹெல்தி கிச்சன்' புதிய உணவுகளை அறிமுகம் செய்கிறது. சிறுவர், பெரியவர் பிரச்னைகளுக்கு தீர்வு சொல்கிறது, 'இளஸ் மனஸ்' பகுதி. அனைத்து வயதினரும் விரும்பும், ஒரே இதழாக உள்ள சிறுவர்மலர் இதழ் மேலும் சிறப்புற, இனிய வாழ்த்துகள். - சி.சந்திரமோகன், மதுரை. தொடர்புக்கு: 94887 89892


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !