உள்ளூர் செய்திகள்

வீ டூ லவ் சிறுவர்மலர்!

என் வயது, 50; இல்லத்தரசியாக இருக்கிறேன். ஒவ்வொரு சனிக்கிழமையும் சிறுவர்மலர் இதழை படிக்கும் போது, மனம் புத்துணர்வு பெற்று, மீண்டும் பள்ளி மாணவியாக மாறி விடுகிறேன். வீட்டில் தேநீருக்கு அடுத்ததாக தேடுவது சிறுவர்மலர் இதழைத் தான். அது என் வாராந்திர மகிழ்ச்சி. 'ஸ்கூல் கேம்பஸ்' பகுதியில் கடிதங்களை படிக்கும் போது, திறமை மிக்க ஆசிரியர்களை கண்டு பெருமை கொள்கிறேன். என் சமையல் அறையில், 'மம்மீஸ் ஹெல்தி கிச்சன்!' புதிய சுவையையும், உற்சாகத்தையும் தருகிறது. சிறுவர்மலர் குழந்தைகளுக்கான இதழ் மட்டுமல்ல; எல்லா வயதினரையும் குழந்தையாக மாற்றும் இனிய நண்பன். வயது அதிகரித்தாலும், மனதை இளமையாகவே வைத்திருக்கும் இனிய தோழன் சிறுவர்மலர்! - கே.கோகிலா, மதுரை. தொடர்புக்கு: 97151 25412


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !