வன உயிரினங்களை பாதுகாப்போம்!
* உலகுக்கு, வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தை, 1887ல் அறிமுகப்படுத்தியது, நம் நாடு* இயற்கை சமநிலையை காக்க, காடுகளை பாதுகாப்பது அவசியம். தாவரங்கள் பெருகி, தட்பவெப்பநிலையை சமன்படுத்துகிறது. அன்னிய செலாவணியை ஈட்டி தருகிறது* காடுகள் சுற்றுலா பயணியரை கவர்கின்றன. உலகின் பல நாடுகளில், வனவிலங்கு காப்பகங்கள், புகழ்பெற்ற சுற்றுலா தளங்களாகவும் உள்ளன* விலங்கினம் பற்றிய கல்வியறிவிற்கும், ஆராய்ச்சிக்கும் வனவிலங்கு பாதுகாப்பிடங்கள் உதவுகின்றன* அழிந்து வரும், அபூர்வ விலங்கினங்கள், காடுகளை பெருக்குவதால், புத்துயிர் பெறுகின்றன* சர்வதேச அளவில், காடு பற்றி ஆராய்ச்சி செய்பவர்கள், 'விலங்குகள் சுதந்திரமாக வாழ, மொத்தக் காட்டுப் பகுதியையும் பாதுகாத்து மேம்படுத்த வேண்டும்...' என கூறியுள்ளனர்.ஆண்டு தோறும், அக்டோபர் முதல் வாரம், வன உயிரினப் பாதுகாப்பு வாரமாக கொண்டாடப்படுகிறது.