உள்ளூர் செய்திகள்

யார் இந்த புகழ்பெற்ற பெண்மணிகள்!

இங்கு ஆறு அயல்நாட்டுப் பெண்மணிகளைப் பார்க்கிறீர்கள் தானே! இவர்களைப் பற்றிய வாழ்க்கை குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை படித்து யார் அவர்கள் என்பதை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்!1. சிறைச் சாலை சீர்திருத்தம். முக்கியமாகப் பெண்கள், சிறைச்சாலைகளில் கேவலமாக, கொடுமையாக நடத்தப்படுவதைக் கண்டு, அதற்காகப் போராடி வெற்றி கண்டவர். க்வாக்கர் குடும்பத்தில் பிறந்த இவர் யார்?2. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் (லெனின் கிராட்)ல் பிறந்து, பாலட் நடனத்தில் புகழ்பெற்றவர் இவர். இவரது அன்னப் பறவை என்னும் நடனம் மகத்தானது. இவரது பெயர்?3.வார்ஸாவில் (போலந்து) பிறந்த இவர், வறுமை வாட்டினாலும் விஞ்ஞானத்தில் மோகம் கொண்டவர். மணந்து கொண்ட கணவனும் ஒரு விஞ்ஞானி. தன் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்ற இவர் யார்?4.ஆங்கில இலக்கியத்தில் புகழ் பெற்ற நாவலாசிரியை. 1816ல் யார்க் ஷயரில் பிறந்தவர். நான்கு சகோதரிகளோடும், ஒரு சகோதரரோடும் பிறந்து, வறுமையில் வாடியபடியே வாழ்ந்து, மகத்தானதோர் நாவலை எழுதியவர். இவரது பெயர்?5.தனது பதினெட்டாவது வயதில் இங்கிலாந்தில் சிங்காசனத்தில் அமர்ந்து, எண்பது ஆண்டுகளுக்கு மேலாகக் கீர்த்தியுடன் ஆட்சி செய்த அரசியான இவர் யார்?6.செல்வசெழிப்பில் பிறந்தும் துயருறும் நோயாளிகளுக்காக உழைக்க, தன் வாழ்நாளையே அர்ப்பணித்தவர். ப்ளாரன்ஸ் நகரில் 1820ம் ஆண்டு பிறந்த இவர் யார்?விடைகள்:1.எலிஸபெத்பிரை, 2.அன்னா பாவ்லோவா, 3.மேரிக்யூரி, 4.சார்லட்டி புராண்டி, 5.விக்டோரியா காராணி, 6. பிளாரன்ஸ் நைட்டிங்கேல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !