உள்ளூர் செய்திகள்

ய்... யாவ்... ஆவ்!

சென்னையிலுள்ள மேல்நிலைப்பள்ளி ஒன்றில் படித்து வந்தேன். எங்களது தமிழ் ஆசிரியர் பாடம் நடத்தும் போது யாராவது, 'கொட்டாவி' விட்டால் அவ்ளோதான். பாடம் நடத்துவதை நிறுத்திவிட்டு, அந்த மாணவியை எழுப்பி தமிழ் வகுப்பு முழுவதும் முட்டிப் போட வைப்பார். கொட்டாவி விடுவது அவருக்கு பிடிக்கவே பிடிக்காது.ஒருநாள்- அவர் பாடம் நடத்தும்போது, ஒரு மாணவி, 'கொட்டாவி' விட்டாள். அப்போது தமிழாசிரியர் அந்த மாணவியை கண்டித்து கொண்டிருக்கும்போதே, எதேச்சையாக ஆசிரியருக்கும், 'கொட்டாவி' வந்தது.அவருக்கு மிகுந்த அவமானமாகிவிட்டது. நாங்கள் எல்லாருமே நமட்டுச் சிரிப்புடன் ஆசிரியரை பார்த்தோம். அவருக்கு தர்மசங்கடமாகி விட்டது.தும்மல், கொட்டாவி எல்லாம் இயற்கையாக நேரிடும் செயல் என்று புரிஞ்சிக் கிட்டார்... எனவே, அன்றிலிருந்து யாரும் கொட்டாவிக்காக திட்டு வாங்கவில்லை. எங்களை காப்பாற்றிய கொட்டாவிக்கு நன்றி!- ரா.சவிதா ஸ்ரீ, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !