உள்ளூர் செய்திகள்

121212

பெண்மனசு!

ஆணுக்கல்ல,பெண்ணுக்குமேபுரியாது;புலப்படாதது!முற்றிலுமறியஞானி,விஞ்ஞானியாலும்ஆகாது!இந்திரனாயினும்,எந்திரனாயினும்,பெண்ணிடம்தோற்பவன் தான்!ஆக,பெண் மனமோர்விசித்திரம்;புரிய முயல்வதோர்விரயம்!— ச.பிரசன்னா.

இருள்!*பூக்கள் விற்ற கிராமம்புழுதி விற்கிறது...அகல் விளக்கில்ஒளிர்ந்த கிராமம்மின்சார விளக்கில்இருள்கிறது!— வைரமுத்து.

நெருப்பு!*பெண்ணே...நீ ஒரு பிரபஞ்சம்...நெருப்பு உனது காதல்...குளிர்காய,சமைக்க,*விளக்கேற்ற,உன்னிலிருந்து தான்எடுத்துக் கொள்கிறோம்நெருப்பை!— பழநி பாரதி.

பாதி வெந்த சோறு!* சுதந்திரச்சோறுஇன்னும் கொஞ்சம்இருந்திருக்கலாம் உலையில்;பரிமாறப்பட்டுவிட்டதுபாதி வெந்த நிலையில்!* சரியாகசெரிமானம் ஆகாமல்...பாவம்பாரதமாதாவீங்கி நிற்கிறாள் இரைப்பை;வாங்கி நிற்கிறாள் இரைப்பை!— வாலி.

காதலின் சுவடுகள்!

* காதலின் சுவடுகள் கடுமையாய்பதிந்ததால்வெறுமையின் வட்டத்தில் வேதனைஆரத்தில் வாழ்வதே பாரமாய், வலிகளே சாரமாய்ஆகித்தான் போனதே ஆழமாய் நோகுதே!நிகழ்ந்தது யாவுமே நிறைவையே தந்ததால்உள்ளிலே ஒரு குரல் வேள்வியே என்றது!— தாமரை.

எரியூட்டுதல்!* எரிவதற்குத் தயாராய்எப்போதுமுண்டுஎனக்குள்ஓர் மூங்கில்காடு!* வெந்து தணிவதற்கும்வந்து அணைப்பதற்கும்உன்னால் மட்டுமேசாத்தியம்!* எதிர்வரும் காலங்களிலாவதுஎன் நினைவுகள்உன் மனதை வருடினால்வந்துவிட்டுப்போவாழ்வில் வசந்தம் வீச!— சிவபாரதி.

ஊழல்!* ஊழல் ஒரு பெருச்சாளி...வளை தோண்டிக் கொண்டேஇருக்கிறது!* ஊழல் ஒரு புற்று நோய்...பரவிக் கொண்டேஇருக்கிறது!* ஊழல் ஒரு மெகா தொடர்... 'எபிசோட்' ஓடிக்கொண்டேஇருக்கிறது!* ஊழல் ஓர் ஆணிவேர்...பூமிக்குள் போய் கொண்டே இருக்கிறது!— ராம.வேதநாயகம்.

வித்தியாசமான நாடு!

* இந்தியாவித்தியாசமான நாடு...உள்நாட்டு தொழிலாளர்களைப்பிச்சைக்காரர்களாக்கும்வெளிநாட்டு முதலாளிகளைபணக்காரர்களாக்கும்!— பா.விஜய்.

வாய்ப்பு வானவில்!

* எண்ணக் கற்களைமுயற்சி உளியால் செதுக்கு...வெற்றி சிற்பம்வெளிவரும்!— மான்சி.

காலத்தை வெல்க!

* கடந்து வந்த பாதையை விடகடக்கப் போகும் தூரத்தைகவனத்தில் நிறுத்துபின்னடைவுகள்தற்காலிகமானவையே...* வாய்ப்பு வானவில்கலையும் முன்கவனமாய் காரியமாற்றிடுகாலத்தை வெல்!— அதியமான்.

அன்பு!* அன்பு இருக்கபகைமைக்குப் பாலமெதற்கு?* பண்பிருக்கதுன்பத்திற்கு தோரணமெதற்கு?* பொறுமை -இது நம் வெறுமையையும்வெளிச்சமாக்கும்!வறுமையையும் வடிகட்டும்!* பொறுமை...புதைந்துபோனவாழ்க்கையையும் புதுப்பிக்கும்!—'செல்லம்' ரகு.

மரம்!* உயர்ந்துதலைநிமிர்ந்து நில்!மழை, புயல், வெயில், பனி - எனஎதையும் தாங்கு!* இயற்கையில் இருஇயற்கையாக இரு!* உண்ணக் கனியும்இளைப்பாறுதலும் கொடு!* அடர்ந்த ஞானம்பசுமையின் அழகுநீண்ட ஆயுள்இவைகளைப் பெற்றுக்கொள்!* நீ, உனக்காக வாழாமல்உன்னை, பிறருக்கு அர்ப்பணி!ஆம்!மரங்களுக்கு சீடனாகுங்கள்ஒவ்வொரு மரமும், போதிமரம்...இது உண்மை தான்!— என்.சுரேஷ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !