உள்ளூர் செய்திகள்

ஒரு ஓவியத்துக்கு, ரூ.13 கோடியா!

கடந்த, 1921ல் வரைந்த ஓவியம் ஒன்று, சமீபத்தில், 13 கோடி ரூபாய்க்கு விற்பனையானது. அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் வரைந்த இந்த ஓவியம் தான், இவ்வளவு தொகைக்கு ஏலம் விடப்பட்டது. சர்ச்சில், 40 ஆண்டுகள் பாதுகாத்து, மரணமடைவதற்கு முன், ஓவியத்தை, கிரேக்க கப்பல் வியாபாரியான, அரிஸ்டாட்டில் ஒனாசிசுக்கு பரிசாக கொடுத்தார். இவரது மறைவுக்கு பின் ஏலம் விடப்பட்ட இந்த ஓவியம் தான், இவ்வளவு பெரிய தொகைக்கு விற்பனையாகியுள்ளது.சுட்டுக் கொல்லப்பட்ட, அமெரிக்க அதிபர் ஜான் கென்னடியின் மனைவியை மறுமணம் செய்தவர் தான், ஒனாசிஸ்.— ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !