உள்ளூர் செய்திகள்

கட்டிப்பிடி வைத்தியத்துக்கு 2500 ரூபாய்!

பிரிட்டன் தலைநகரான லண்டனில், ஒரு புதுமையான, பிசினசை துவக்கியுள்ளனர். 'வாங்க... கட்டிப் பிடிக்கலாம்!'என்ற தலைப்பில், மாதத்துக்கு இரண்டு முறை, ஞாயிற்று கிழமைகளில், ஒரு முகாம் நடத்தப்படுகிறது.இந்த ஒவ்வொரு முகாமும், நான்கு மணி நேரம் நடக்கும். இதில் பங்கேற்க நபர் ஒன்றுக்கு, 2,500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முழுமையாக குளிரூட்டப்பட்ட அறையில், படுக்கைகள், குஷன் இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கும். முகாமில் பங்கேற்கும் அனைவரும், ஒருவரை ஒருவர் கட்டித் தழுவியபடி, நான்கு மணி நேரம் படுத்திருக்க வேண்டியது தான்.இந்த முகாமில் பங்கேற்பதற்கு, சில நிபந்தனைகளும் உள்ளன. பங்கேற்கும் அனைவரும், கட்டாயமாக உடை அணிந்திருக்க வேண்டும்; எந்த காரணத்தை கொண்டும், முத்தம் கொடுப்பது, சில்மிஷம் செய்வது என, எல்லை மீறக் கூடாது.இதையும் மீறி, சேட்டை செய்தால், காலில் லாடம் கட்டி, மாமியார் வீட்டில் கொண்டு போய் விட்டு விடுவர். 'தொடர்ச்சியான பணிச் சுமைகளால், மன அழுத்தத்தில் பாதிக்கப்படுவோருக்கு, நிவாரணம் அளிக்கும் வகையில், ஒரு சமூக சேவையாகத்தான், இந்த முகாம் களை நடத்துகிறோம்...' என்கின்றனர், நிர்வாகிகள்.— ஜோல்னா பையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !