477 கோடி ரூபாயில் வீடு!
பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான, டி.எல்.எப்., சேர்மன், கே.பி.சிங்கின் பேத்தி, அனுஷ்கா. இவர், டில்லியில், செல்வந்தர்கள் வாழும், பிருத்விராஜ் சாலையில், விமானப்படை முன்னாள் தலைவரான, சீப் - மார்ஷல், பிரதாப் சந்திரலாலின் வீட்டை, 477 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார். மொத்தம், 7,143 சதுர மீட்டர் பரப்பளவுள்ள நிலத்தில், சுற்றிலும் தோட்டம் சூழ்ந்துள்ள நிலையில், 780 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது, இவ்வீடு. அமைச்சர்கள் குடியிருப்பு வீடுகள் நிறைந்த இந்த பகுதியில், தனியாருக்கு சொந்தமான வீடுகள் மிக குறைவு. — ஜோல்னாபையன்.