உள்ளூர் செய்திகள்

பெட்ரோலுக்கு அடிமையான அழகான ராட்சசி!

மதுவுக்கு அடிமையானவர்களை பார்த்திருக்கிறோம். ஆனால், பெட்ரோலுக்கு அடிமையான, யாரைப் பற்றியாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அந்த அழகான பெட்ரோல் ராட்சசியின் பெயர் ஷான்னன். பிரிட்டனைச் சேர்ந்தவர். சரக்கு வாசனையை நுகர, டாஸ்மாக்கை சுற்றிச் சுற்றி வரும், தமிழக, 'குடிமகன்'களைப் போல், பெட்ரோல் வாசனை எங்கிருந்து வந்தாலு<ம், உடனடியாக அங்கு ஓடிச் சென்று விடுவார், இந்த பெண்.தினமும், 12 ஸ்பூன் பெட்ரோல் குடிக்காவிட்டால், அன்றைய பொழுதே வேஸ்ட் என்பது, இவரது கூற்று. சிறு வயதிலேயே இவருக்கு இந்த பழக்கம் ஏற்பட்டு விட்டது. ஆரம்பத்தில், இவரது தாயார் தடுத்துப் பார்த்தார். எந்த பலனும் இல்லை. தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை அல்லவா? அதனால், இவரது பெட்ரோல் பழக்கமும் தொடர்கிறது.இதுபற்றி ஷான்னன் கூறுகையில்,'பெட்ரோல் குடித்தால், நரம்பு மண்டலத்தில் பாதிப்பு ஏற்படும் என்பதும், கல்லீரல், சிறுநீரகங்கள் பாதிக்கப்படும் என்றும், அதனால் <உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்றும் எனக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும், பெட்ரோல் குடிக்காமல் என்னால் இருக்க முடியவில்லை. தொண்டைக்குள் ஒரு மிடறு, பெட்ரோல் செல்லும்போது ஏற்படும் சுகம் இருக்கிறதே. அப்பப்பா... அதை வார்த்தையால் வர்ணிக்க முடியாது...' என, நாக்கை சப்புக் கொட்டுகிறார்.ஊகூம்... இவரைத் திருத்த முடியாது.— ஜோல்னா பையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !