உள்ளூர் செய்திகள்

வித்தியாசமான ஜோடி!

குஜராத் மாநிலத்தை சேர்ந்த, பெண் பிரக்ஞா ஹலானி, அகமதாபாதில், 'ஆர்கிடெக்டர்' ஆக இருந்தார். மற்றவர்களை போல் உயரம் இல்லையே என்று வருத்தப்பட்டார். இதேபோல், கேரளா மாநிலம், மலப்புறத்தில், நிகில் என்பவர், 'அனிமேஷன்' தொழில் செய்து வந்தார். எப்போதும் சமூகவலைதளத்தில் மேய்வது தான், இவரின் பொழுதுபோக்கு. அதன் மூலமாக இருவரும் அறிமுகம் ஆயினர். வலை நட்பு, காதலாக மாறியது. இருவரும், பெங்களூரில் சந்தித்து, சினிமா, பார்க், ஹோட்டல் என்று சுற்றித் திரிந்தனர்.காதல், திருமணம் என்று பெற்றோரிடம் சொன்னபோது, மாப்பிள்ளை வீட்டில் முழு சம்மதம் கூறினர்; பெண் வீட்டினர் சற்று தயங்கினர். ஆனால், மகள் உறுதியின் முன் பெற்றோர் தோற்று விடவே, திருமணமும் அரங்கேறியது. இப்போது, மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வருகின்றனர்.ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !