ஆதிவாசிகளுக்கு சேவை செய்யும் மருத்துவர்!
'நோயாளிகளிடம், எப்படியெல்லாம் பணம் கறப்பது...' என, அலையும் மருத்துவர்களுக்கு மத்தியில், மாறுபட்டு இருக்கிறார், அரசு பெண் மருத்துவர், கே.எம்.நூனா மர்ஜா.இவர், பயிற்சி மருத்துவராக இருந்த போது, கேரள மாநிலம், நிலம்பூருக்கு உட்பட்ட ஆதிவாசிகளின் ஊர்களுக்கு சென்று, சேவை செய்தார்.மருத்துவரான பின், அங்கேயே பணியாற்ற விரும்பியவருக்கு அனுமதி கிடைக்கவில்லை.பட்டினியில் வாடும், சோல நாயக்கர் என்ற ஆதிவாசிகளின் நிலைமையை பார்த்து, கண் கலங்கியவர், 'யார் தடுத்தாலும், அவர்களுக்கு உதவுவேன்...' என்று, சபதம் போட்டு, விடுமுறை நாட்களில், நல்ல உள்ளம் கொண்ட மருத்துவ நண்பர்களை அழைத்துச் சென்று, ஆதிவாசிகளுக்கு மருந்து மற்றும் உணவு அளித்து வருகிறார்.— ஜோல்னாபையன்.