ஏ.டி.எம்.,மில் வந்த போலி ரூபாய் நோட்டு!
டில்லியில், சுங்க விகார் பகுதியில் உள்ள ஸ்டேட் பேங்க் ஏ.டி.எம்., ஒன்றிற்கு பணம் எடுக்க சென்றார், ஒருவர்.அப்போது, அவருக்கு கிடைத்த நான்கு, 2,000 ரூபாய் நோட்டுகளைக் கண்டு, அதிர்ச்சி அடைந்தார்; காரணம், ஒரிஜினல் நோட்டுகள் போல அச்சிடப்பட்டு இருந்த அந்த நோட்டுகளில், ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா என்பதற்கு பதிலாக, 'சில்ட்ரன் பேங்க் ஆப் இந்தியா' என்று இருந்தது. ஆனால், 'ஏ.டி.எம்., மிஷனுக்குள் இந்த போலி ரூபாய் நோட்டுகள் எப்படி வந்தது...' என்ற கேள்விக்கு தான் யாரிடமும் பதில் இல்லை. — ஜோல்னாபையன்.