20 ஆயிரம் பேர் வசிக்கும் வீடு!
நம் அண்டை நாடான சீனாவின் ஹாங்ஜோவு மாகாணத்தில் உள்ளது, ஜியான்ஜியாங் நகரம். இங்குள்ள 'ரிஜென்ட் இன்டர்நேஷனல்' என்ற அடுக்குமாடி குடியிருப்பு, சீனா முழுதும் பிரபலமாகி விட்டது. இங்கு, 20 ஆயிரம் பேர் குடியிருப்பது தான், இதற்கு காரணம். ஒரு சிறிய நகரத்தில் உள்ள மக்கள் தொகை, இந்த குடியிருப்பில் உள்ளது. 'எஸ்' வடிவில் அமைந்துள்ள இந்த கட்டடம், 853 அடி உயரம் உடையது. 39 தளங்கள் உள்ளன. சூப்பர் மார்க்கெட், நீச்சல் குளம், தியேட்டர், அழகு நிலையம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இதில் உள்ளன. இங்கு வசிப்பவர்கள், தங்கள் தேவைகளுக்காக வெளியில் செல்ல வேண்டிய அவசியமே இல்லை. ஒரு அறை மட்டுமே உள்ள வீட்டில் குடியிருக்க, மாத வாடகை, 18 ஆயிரம் ரூபாய். இரண்டு அறைகள் கொண்ட வீட்டுக்கு, 45 ஆயிரம் ரூபாய் வாடகை. இங்கு வசிப்பவர்களில் பெரும்பாலானோர், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் இளைஞர்கள். — ஜோல்னாபையன்