உள்ளூர் செய்திகள்

சுற்றுலா பயணியரை கவரும் சிங்க சிலை!

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான, சுவிட்சர்லாந்தில் உள்ள பெரிய நகர், ஜுரிச். இதன் அருகில், அழகிய கிராமங்கள் ஏராளம் உள்ளன. அங்கெல்லாம் கொழு கொழுவென்று பசுக்கள் மேய்வதை காணலாம். இங்குள்ள மலை ஒன்றில், 700 ஆண்டுகள் பழமையான, சிங்கம் சிலை ஒன்று, சுற்றுலா பயணியரை மிகவும் கவர்ந்து வருகிறது. மலையின் பாறையை குடைந்து, இச்சிலையை உருவாக்கியுள்ளனர். உடலில் ஆயுதத்தால் தாக்கப்பட்டு, உயிர் விடும் நிலைமையில் காட்சியளிக்கிறது, இந்த சிங்கம் சிலை. இதை, 'லயன் ஆப் லுாசேன்' என்று அழைக்கின்றனர்! — ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !