உள்ளூர் செய்திகள்

நடமாடும் நகைக்கடை!

இந்தியாவில், முதன் முதலாக, நடமாடும் நகைக்கடை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார், போபி செம்மண்ணூர் என்பவர்.கேரளா, தமிழகம் மற்றும் உலகின் பல்வேறு நாடுகளிலும், இவரது நகைக் கடைகள் இயங்கி வருகின்றன. நகை வியாபாரத்தில், புதுமைகளை புகுத்தி, வாடிக்கையாளர்களை கவர்வது தான், போபியின் வியாபார தந்திரம்.உலகப் புகழ் பெற்ற கால்பந்து விளையாட்டு வீரர் மரடோனாவை, அர்ஜென்டினாவில் இருந்து தன் நகைக் கடைக்கு அழைத்து வந்து, ரசிகர்களை மகிழச் செய்தவர் போபி. இப்போது, அறிமுகப்படுத்தி உள்ள இந்த நடமாடும் நகைக்கடை, நாடு முழுவதும் வர இருக்கிறது. 'தரமான நகைகளை, குறைந்த விலையில் விற்பது, என் லட்சியம்...' என்கிறார் இவர்.— ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !