உள்ளூர் செய்திகள்

குளிர்காலத்துக்கு ஏற்ற சூப்!

கண்டந்திப்பிலி ரசம்!தேவையானவை: கண்டந்திப்பிலி - 100 கிராம், துவரம் பருப்பு, மிளகு, நெய் மற்றும் கடுகு - தலா ஒரு தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் - இரண்டு, புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, உப்பு - தேவையான அளவு.செய்முறை: வாணலியில் நெய் விட்டு, மிளகு, காய்ந்த மிளகாய், துவரம் பருப்பு மற்றும் ஒடித்த கண்டந்திப்பிலியைச் சேர்த்து வறுக்கவும். பின், மிக்ஸியில் போட்டு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி நைசாக அரைக்கவும்.ஒரு பாத்திரத்தில் புளியைக் கரைத்து அடுப்பில் வைத்து, அரைத்த விழுது, தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பின்னர், கடுகு தாளித்துக் கொட்டி இறக்கவும்.குறிப்பு: காய்ச்சல், உடல் வலி இருக்கும் சமயங்களில் இந்த ரசம் வைத்து, சூடான சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். வறுத்த மணத்தக்காளி வற்றல் அல்லது பருப்புத் துவையல் இதற்கு பொருத்தமாக இருக்கும்.மிக்ஸட் வெஜ் சூப்!தேவையானவை: காய்கறி கலவை மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம் - தலா கால் கப், பூண்டு பல் - இரண்டு (பொடியாக நறுக்கி கொள்ளவும்), வெண்ணெய், கார்ன் ப்ளார் மற்றும் எலுமிச்சை சாறு - தலா ஒரு தேக்கரண்டி, சர்க்கரை - கால் தேக்கரண்டி, மிளகுத்துாள் மற்றும் உப்பு - தேவையான அளவு.செய்முறை: கடாயில் வெண்ணெயைப் போட்டு, பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கி, காய்கறிக் கலவையைச் சேர்த்து நன்றாக கிளறவும். பின்னர், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்க்கவும்.காய்கறிகள் நன்றாக வெந்ததும், கார்ன் ப்ளாரை சிறிதளவு நீரில் கரைத்து சேர்க்கவும். பின்னர், சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து, அடுப்பை அணைத்து இறக்கவும். மேலாக மிளகுத்துாளைத் துாவி, பிரெட் ஸ்டிக்ஸுடன் பரிமாறவும்.சைனீஸ் வெஜ் சூப்! தேவையானவை: பொடியாக நறுக்கிய காய்கறி கலவை, வெங்காயம் - தலா கால் கப், பொடியாக நறுக்கிய பூண்டு - இரண்டு பல், எண்ணெய் மற்றும் கார்ன் ப்ளார் - தலா ஒரு தேக்கரண்டி, சில்லி சாஸ் - அரை தேக்கரண்டி, சோயா சாஸ் - ஒரு தேக்கரண்டி, காய்கறிகள் வேகவைத்த தண்ணீர் - ஒரு கப், மிளகுத்துாள், நுாடுல்ஸ் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.வேகவைத்த நுாடுல்ஸுடன், சிறிதளவு கார்ன் ப்ளார் சேர்த்து புரட்டி, எண்ணெயில் போட்டு வறுத்துக் கொள்ளவும்.செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர், வேக வைத்த காய்கறிக் கலவையை சேர்த்து நன்றாக கிளறி, காய்கறிகள் வேகவைத்த தண்ணீர் ஊற்றி, உப்பு போடவும்.அதன் பின், சில்லி சாஸ் மற்றும் சோயா சாஸ் இரண்டையும் ஊற்றி, கார்ன் ப்ளாரை சிறிதளவு நீரில் கரைத்துச் சேர்க்கவும். சூப் சேர்ந்து வரும்போது, அடுப்பை அணைத்து இறக்கவும். மிளகுத்துாளை துாவி, வறுத்த நுாடுல்ஸை சூப்பின் மீது போட்டு பரிமாறவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !