கவிதைச் சோலை!
மீண்டும் பிறப்பெடுப்பேன்!* தாயின் ஸ்பரிசத்தைஉன்அரவணைப்பில் கண்டேன்!* தந்தையின் நேசத்தைஉன்கரம் பற்றிநடக்கையில் கண்டேன்!* காதலனின் மோகத்தைஉன் காதல் மொழிபேசும்கண்களில் கண்டேன்!* கணவனின் கரிசனத்தைஉன்,'அடியேய்' எனும் ஒற்றைவார்த்தையில் கண்டேன்!* யாதுமாகி நின்றாய்!* கண்ணீருடன்...கண்ணியத்துடன்...ஏற்கிறேன் உன்னை...என்உயிர் தோழனாய்!* மீண்டும் பிறப்பெடுப்பேன்!தாயாய்...தந்தையாய்...காதலனாய்...கணவனாய்...நீ காட்டும் அன்பினைதனித்தனியாய் சுகிக்க!— ஆர். மீனா, மதுரை.