90 வயது சாதனை!
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷுக்கு, தற்போது, 90 வயது. இவருக்கு விமானத்தில் இருந்து பாரசூட் மூலம் தரையில் குதிக்கும் விளையாட்டு, மிகவும் பிடிக்கும். முதன்முதலில், விமானத்தில் இருந்து குதித்த போது, இவருக்கு ஐந்து வயது. சமீபத்தில், தன், 90வது பிறந்த நாளை கொண்டாடிய புஷ், அனைவரும் வியக்கும்படி, 'ஸ்கை டைவிங்' செய்து, பரபரப்பு ஏற்படுத்தினார். இதுவரை, பதினெட்டு முறை, இவ்வாறு குதித்து, சாகசம் புரிந்துள்ளார். — ஜோல்னாபையன்.