சிறப்பு உணவுக்கென்று தனி வெப் - சைட்!
இன்று ஒவ்வொரு ஜாதியினருக்கும் பிரத்யேக உணவு வகைகள் இருப்பதுபோல், தலித் மக்களுக்கென்று சிறப்பு உணவு வகைகள் இருக்கின்றன.அந்த உணவுகளின் சிறப்பு மற்றும் ருசியை அனைவரும் அறியும் விதமாக, 'தலித் பூட்ஸ்.காம்' என்ற வெப் - சைட்டை உருவாக்கி, உணவு வகைகளை விற்பனை செய்து வருகிறார் எழுத்தாளரும், சிந்தனையாளருமான, சந்திரபான் பிரசாத்.'முதலில் ஊறுகாய் மற்றும் மசாலாக்களை மட்டும், 'ஆன் லைன்' மூலம் டில்லியில் விற்கிறோம்; நம் முன்னோர், இயற்கை முறையில் ஊறுகாய்களை தயாரித்துள்ளனர். அதனால், நாங்களும் ரசாயன பொருட்களை பயன்படுத்தவில்லை...' என்கிறார் சந்திரபான்.— ஜோல்னாபையன்.