யானைகள் விரும்பும் அருவி!
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தை சுற்றி, 33 காட்டு அருவிகள் உள்ளன. ஆனால், இப்பகுதியில் உள்ள யானைகள், தேவிகுளம் - மாங்குளம் வனப்பகுதியில் அமைந்திருக்கும், அருவியின் நீரை மட்டுமே பருகும். மற்ற அருவிகளை விட, இந்த அருவியில் நீர் சுவையாக இருப்பதே, இதற்கு காரணம்.மலையிலிருக்கும் மூலிகை தாவரங்களின் வழியாக பாய்ந்து வருவதால், சுவையாக இருப்பதாக கூறுகின்றனர்.யானைகள் கூட்டமாக வந்து, அருவி நீரை குடிப்பதை காண, சுற்றுலா பயணியர், அதிகளவில் இங்கு குவிகின்றனர்.இவர்களால், யானைகளுக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் இருக்க, வனத்துறையினர் கண்காணிக்கின்றனர்.— ஜோல்னாபையன்