ஜப்பானை ஆளப்போகும் நடிகை!
உலகின் பல்வேறு நாடுகளில் பல சந்தர்ப்பங்களில், நடிகர்கள், ஆட்சியாளர்களாக இருந்தது உண்டு. அவ்வரிசையில், தற்போது, ஜப்பான் அரசியலில் அதிகமாக பேசப்படும் பெயர், ரெனோ முறாதா! முன்னாள் நடிகையும், ஜப்பான் எதிர்க்கட்சி தலைவியுமான இவர், மக்களிடையே செல்வாக்கு மிக்கவராக விளங்குவதால், 'வரும் தேர்தலில் வெற்றி பெற்று, பிரதமர் ஆவார்...' என்கின்றனர்.— ஜோல்னா பையன்.